மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் |
மலையாளத்தில் கடந்த 2021ல் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான படம் குறூப். 30 வருடங்களுக்கு முன்பு கேரளாவில் தனது இன்சூரன்ஸ் பணத்தை மோசடியாக கைப்பற்றுவதற்காக வேறு ஒருவரை கொலை செய்து நாடகமாடி தப்பித்துச் சென்ற சுகுமார குறூப் என்கிற கிரிமினலின் வாழ்க்கையை மையப்படுத்தி அந்த படம் ஒரு கிரிமினல் ஆக்ஷ்ன் டிராமாவாக வெளியாகி இருந்தது. குறூப் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்திருந்தார். இந்த நிலையில் இதே கிரிமினலின் கதை தற்போது கேங்ஸ் ஆப் சுகுமார குறூப் என்கிற பெயரில் முழுக்க முழுக்க காமெடி வெர்சனில் உருவாகியுள்ளது.
இனியா, ஸ்ரீஜித் ரவி, சுஜித் சங்கர் ஆகியோருடன் பல புது முகங்கள் நடித்துள்ள இந்த இந்தப் படத்தில் பிரபல வில்லன் நடிகர் அபு சலீம் சுகுமார குறூப் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சுகுமார குறூப்பின் கையாட்கள் என்று சொல்லப்படுபவர்களின் பார்வையில் அவரைப்பற்றி கதை நகர்வதாக காமெடியாக சித்தரிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியாகியுள்ள இந்த படத்தின் டீசர் இதை உறுதி செய்துள்ளது.