தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' | 'பெத்தி' படத்தில் சிவராஜ் குமார் முதல் பார்வை வெளியீடு | ‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் | சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் |
தமிழ் சினிமாவின் முக்கியக் கலைஞராக இருப்பவர் கமல்ஹாசன். தயாரிப்பு, இயக்கம், நடிப்பு, பாடகர் என பன்முகத் திறமை கொண்ட ஒரு கலைஞராக கடந்த 64 ஆண்டுகளாக இருந்து வருகிறார். அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த 'களத்தூர் கண்ணம்மா' படம் வெளிவந்து இன்றுடன் 64 ஆண்டுகள் நிறைவடைகிறது.
தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் குறிப்பிடத்தக்க சிறந்த படங்கள் பலவற்றில் நடித்துள்ளார். 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கடந்த ஏழு சீசன்களாகப் பணியாற்றி டிவியிலும் தனி முத்திரை பதித்துள்ளார்.
மறக்க முடியாத பல கதாபாத்திரங்களில் நடித்து இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் 'தக் லைப்' படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன் அடுத்தடுத்து சில படங்களை தன் வசம் வைத்துள்ளார்.
பல புதிய தொழில்நுட்பங்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய சினிமாக் கலைஞர் என்ற பெருமை அவருக்குண்டு. அவருடைய இத்தனை ஆண்டு கால கலைப் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்து சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.