ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
திருமணத்திற்கு பிறகு ஜோதிகா, மஞ்சு வாரியர், பிரியாமணி உள்ளிட்ட பல நடிகைகளும் சினிமாவில் மீண்டும் பிசியாக நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு சில படங்களில் நடித்த சினேகாவுக்கு தற்போது எதிர்பார்த்தபடி பட வாய்ப்புகள் இல்லை. இந்த நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கி உள்ள ‛கோட்' படத்தில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார் சினேகா. அதனால் இந்த படம் தனக்கு ஒரு கம்பேக் படமாக அமையும் என்று எதிர்பார்க்கும் சினேகா, புதிய படங்களில் நடிப்பதற்கும் முயற்சி எடுத்து வருகிறார்.
அதோடு, தனது உடல் எடையை குறைத்து பிட்டாக தன்னை மாற்றும் முயற்சியிலும் அவர் படுதீவிரம் அடைந்திருக்கிறார். இதற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கி இருக்கும் சினேகா, ஜிம்மில் வியர்வை சொட்ட சொட்ட நனைந்தபடி தான் ஒர்க் அவுட் செய்யும் ஒரு வீடியோவையும் இணைய பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.