இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
மாமன்னன் படத்தை அடுத்து வாழை என்ற படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் வாழை படம் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாரி செல்வராஜ், விஜய் குறித்தும் ஒரு கருத்து வெளியிட்டுள்ளார். அதில், விஜய்யின் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். அவரது ரசிகர் மன்றங்களில் இணைந்து பணியாற்றி உள்ளேன். தமிழகம் முழுக்க அவருக்கு மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அவரது ஒவ்வொரு படமும் மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த நேரத்தில் அவர் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்திருப்பது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. இப்படி அவர் ஒரு முடிவெடுப்பார் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை என்று கூறி இருக்கிறார் மாரி செல்வராஜ்.