குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடிக்கும் படம் 'அமரன்'. நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் படம். வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் பற்றிய பயோபிக் படமாக இப்படம் உருவாகி வருகிறது. படத்தை தமிழ் தவிர, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக வெளியிட உள்ளார்கள்.
ராணுவ பின்னணியில் ராணுவ வீரர்களைப் பற்றிய படம் என்பதால் இந்திய அளவில் இப்படத்திற்கு வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளது. இப்படத்திற்காக ஹிந்தியில் சொந்தக் குரலில் டப்பிங் பேசுவதற்காக மும்பை சென்றுள்ளார் சாய் பல்லவி.
இன்ஸ்டாவில், “பெயர் அமரன், நான் மும்பையில் டப்பிங் செய்து வருகிறேன்,” என ஹிந்தியை ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளார்.