சீரியல்களுக்கு பாட்டு எழுதுவது தான் கஷ்டம் - பா.விஜய் | 101 வயதில் மறைந்த தெலுங்கு நடிகை கிருஷ்ணவேணி | பிப்ரவரி 21ல் 5 படங்கள் ரிலீஸ் | தண்டேல் : நாக சைதன்யாவின் முதல் 100 கோடி | மம்முட்டி வில்லனாக நடிக்கும் ‛கலம்காவல்' | ஹரிஷ் கல்யாணுக்காக பாடியுள்ள சிம்பு! | வெப் தொடருக்காக ஒன்றிணையும் மாதவன், துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக்! | தனுஷின் அடுத்த ஹிந்தி படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ஜனநாயகன் பட தயாரிப்பாளர் உடன் கைகோர்க்கும் போர் தொழில் பட இயக்குனர்! | ஆறு மாதத்திற்கு முன்பே சம்பளம் தந்த கமலுக்கு நன்றி சொன்ன சிவகார்த்திகேயன் |
தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் தற்போது 'தேவாரா' எனும் படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து ‛கேஜிஎப்' புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இது ஜூனியர் என்டிஆரின் 31வது படமாக உருவாகிறது . இப்பத்தை தற்காலிகமாக 'என்டிஆர் - நீல்' எனும் தலைப்பில் அழைக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ், என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.
இன்று இந்த படத்தின் பூஜை விழா பிரமாண்டமாக ஐதராபாத்தில் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் இப்படம் 2026ம் ஆண்டு ஜனவரி 9ந் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது என படக்குழு புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.