2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

திமுக தலைவர் கருணாநிதியை அனைவரும் அறிவார்கள். ஆனால் ஒரு காலத்தில் காமெடியில் கொடி கட்டி பறந்த நடிகர் ஏ. கருணாநிதி பற்றி இன்றைய தலைமுறைக்கு அவ்வளவாக தெரியாது. இரண்டு கருணாநிதிக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. இருவருமே உயரம் குறைவானவர்கள். எம்ஜிஆரை எதிர்த்து அரசியல் செய்தவர்கள். இருவருமே திருவாரூரைச் சேர்ந்தவர்கள்.
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்து 1948ம் ஆண்டில் வெளிவந்த “ஆதித்தன் கனவு” என்ற படத்தில் ஏ.கருணாநிதி அறிமுகமானார். இதைத் தொடர்ந்து திகம்பர சாமியார், பொன்முடி, தேவகி, கல்யாணி, வளையாபதி என மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த படங்களில் நடித்து புகழ்பெற்றார். வீரபாண்டிய கட்டபொம்மன், மாங்கல்யம், ஆதித்தன் கனவு, பாலும் பழமும், மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி. உள்பட ஏராளமான படங்களில் நடித்தார். குறிப்பாக காமெடி நடிகை டி.பி முத்துலட்சுமியின் ஜோடியாக 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
அந்த காலத்திலேயே ஏ.கருணாநிதி சென்னை தியாகராய நகரில், “மாமியா உணவகம்” என்ற பெயரில் ஒரு அசைவ உணவகம் நடத்தி வந்தார். இங்கிருந்து வெளிநாடுகளுக்குக் கூட ஏற்றுமதி செய்யும் அளவுக்கு அவரது உணவகம் பெயர் பெற்றிருந்தது. இதற்கு காரணம் ஏ.கருணாநிதி அடிப்படையில் ஒரு சமையல் கலைஞர்.
1923ல் திருவாரூரில் பிறந்த இவர் 58வது வயதில் காச நோயால் காலமானார்.