சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி | ரஜினி பிறந்தநாளில் “படையப்பா” ரிட்டர்ன்ஸ் |

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் லைகா. லண்டனை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம் பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வருகிறது. சமீப நாட்களாக இந்த நிறுவனத்தில் தயாரிக்கும் படத்தில் நடிக்க நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருவதாக தகவல் வெளியானது. ஆனால் எங்கள் நிறுவனத்தின் சார்பில் நாங்கள் நடிகர் நடிகைகளை தேர்வு செய்யவில்லை என்று லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக லைக்கா நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
லைகா புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் பல அதிகாரபூர்வமற்ற நடிகர் தேர்வுக்கான விளம்பரங்கள் பரவி வருவது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கான காஸ்டிங் அழைப்புகள் அல்லது ஆடிஷன்கள் எங்களின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கங்கள் மூலம் மட்டுமே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
எங்களால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத காஸ்டிங் அழைப்புகள் அல்லது ஆடிஷன்களை புறக்கணிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். லைகா புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் காஸ்டிங் அழைப்புகள் அல்லது ஆடிஷன்களை நடத்தும் அங்கீகரிக்கப்படாத நபர்கள் அல்லது ஏஜென்சிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்பதை நினைவில் கொள்ளவும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.