என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
ஒரு காலத்தில் சூப்பர் ஹிட்டான கமர்ஷியல் படங்களை இயக்கியவர் ராம்கோபால் வர்மா. தற்போது சர்ச்சைக்குரிய படங்களை எடுப்பதையும், சர்ச்சைக்குரிய கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.
சமீபத்திய வீடியோ பேட்டி ஒன்றில் பெயரைக் குறிப்பிடாமல் ஒரு தெலுங்கு ஹீரோ மீது குற்றம் சுமத்தியுள்ளார். அந்த பேட்டியில், “தெலுங்கு சினிமாவில் ஒரு ஹீரோ நடித்து படம் ஒன்று வெளிவந்தது. அந்தப் படத்தால் நஷ்டம் ஏற்பட்டதால் படத்தைத் தயாரித்த நிறுவனம் தியேட்டர்களில் படத்தை நிறுத்திக் கொள்ள முடிவு செய்தது. அது ஒரு கார்ப்பரேட் நிறுவனம். இந்த விஷயத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட ஹீரோ, அந்த நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, அவர் பணத்தைத் தருவதாகவும், இன்னும் சில நாட்கள் படத்தைத் தியேட்டர்களில் ஓட்டுங்கள். இல்லையென்றால் எனது ரசிகர்களுக்கு அவமானமாக இருக்கும் என்று சொன்னாராம். அதன்படி பணத்தை வாங்கிக் கொண்ட நிறுவனம் மேலும் சில நாட்கள் அந்தப் படத்தை தியேட்டர்களில் ஓட்டியது.
ஆனால், இது குறித்த தகவலை அந்தப் படத்தை வெளியிட்ட வினியோகஸ்தர்களுக்கு தெரிவிக்கவில்லை. அவர்கள் படத்திற்கான பேப்பர் விளம்பரத்தை நிறுத்திவிட்டார்கள். அதனால், எந்த விளம்பரமும் இல்லாமல் அந்தப் படம் தியேட்டர்களில் சில நாட்கள் ஓட்டப்பட்டது. இப்படியான விஷயங்களை ஹீரோக்கள் செய்கிறார்கள்,” என வருத்தப்பட்டுள்ளார்.
யார் அந்த ஹீரோ என தெலுங்கு ஹீரோக்களின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஒரு வாக்குவாதத்தை ஆரம்பித்துள்ளார்கள்.