இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
கன மழை காரணமாக கேரள மாநிலத்தில் உள்ள மலைப் பிரதேச சுற்றுலாத்தளமான வயநாட்டில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. நூற்றுக்கணக்கில் உயிரிழப்பு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இழப்பு என மாநிலங்களைக் கடந்தும் துயரத்தை உணர வைத்தது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக கேரள மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு பலரும் உதவிகளை அளித்து வருகின்றனர். தமிழ் நடிகர்களான விக்ரம், சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா, நயன்தாரா, தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, ராம் சரண், அல்லு அர்ஜூன், நடிகை ராஷ்மிகா மந்தனா, மலையாள நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி, துல்கர் சல்மான், பஹத் பாசில், நஸ்ரியா, டொவினோ தாமஸ், ஆசிப் அலி உள்ளிட்ட பலரும் நிதியுதவி குறித்து அறிவித்துள்ளனர்.
ஆனால், கேரளாவில் அதிக வசூலைப் பெறும் சில முன்னணி தமிழ் நடிகர்கள், மற்ற மொழி நடிகர்கள் இன்னும் எந்தவிதமான நிதியுதவியையும் அறிவிக்காதது குறித்தும் சிலர் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர். இரங்கல் சொல்வது மட்டும் தீர்வல்ல, முடிந்தவரையில் ஏதோ ஒரு சிறு உதவி செய்தாலும் அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக இருக்கும் என பலரும் பதிவிட்டுள்ளனர்.
என்ன இயற்கை பேரிடர் நடந்தாலும் சிலர் கண்டு கொள்ளாமல் இருப்பதும், சிலர் உதவி செய்தாலும் அதை வெளியில் சொல்லாமல் இருப்பதும் திரையுலகத்தில் நடந்து வருகிறது.