சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

தமிழ் சினிமாவில் இந்த 2024ம் ஆண்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் ஒன்றாக 'இந்தியன் 2' படம் இருந்தது. ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணி 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்தார்கள் என்பதும் வரவேற்புடன் பார்க்கப்பட்டது. ஆனால், அந்தக் கூட்டணி யாருமே எதிர்பார்க்காத விதத்தில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார்கள். இன்று வரையிலும் படத்தின் வசூல் என்ன என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. பெரும் நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் என்று மட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, 'இந்தியன் 2' படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து கடந்த பத்து நாட்களாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. அதிக விலை கொடுத்து ஓடிடி நிறுவனம் வாங்கியது, படம் தோல்வி என்பதால் விலையைக் குறைக்கச் சொல்கிறது என்றெல்லாம் சொன்னார்கள். அதனால், படத்தை ஓடிடியில் வெளியிடுவதில் சிக்கல் எனவும் தகவல்கள் வந்தன. இந்நிலையில் தற்போது அதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும், திட்டமிட்டபடி படம் வெளியாகி நான்கு வாரங்களுக்குப் பிறகு ஓடிடி ரிலீஸ் என்பது முடிவுகியுள்ளது என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த வாரம் ஆகஸ்ட் 9ம் தேதி 'இந்தியன் 2' படம் ஓடிடியில் வரும் என்பதுதான் இப்போதைய தகவல்.




