அதிகமான பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா, மணிமேகலை சண்டை | இந்த வார ரிலீஸ், யாருக்கு வரவேற்பு? | சமரசம் ஆனதும் வெளிவந்த 'தனுஷ் 52' அறிவிப்பு | மலையாள திரையுலகில் உருவாகிறது புதிய சங்கம்? | மும்பையில் ரூ.30 கோடி மதிப்பில் வீடு வாங்கிய பிரித்விராஜ் | தர்ஷன் இருந்த சிறைப்பகுதியில் சோதனை ; 15 செல்போன், 7 ஸ்டவ், 5 கத்திகள் சிக்கின | கூலி படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய ரஜினி | ஓணம் கொண்டாட்டத்தில் மகனை அறிமுகப்படுத்திய அமலா பால் | ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? | 400 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' |
சின்னத்திரை சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சத்யா சாய் கிருஷ்ணன். இவர் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் அரசி என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால், இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்திலேயே நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாது. இதுகுறித்து தற்போது பேட்டி ஒன்றில் பேசிய சத்யா சாய், 'பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் என்னை நடிக்க அழைக்கும் போது முஸ்லீம் கேரக்டர். கண்ணனுக்கு ஜோடி.. சீரியல் முழுக்க எனது கதாபாத்திரம் வரும் என்று சொல்லி அழைத்தார்கள். நானும் 3 நாட்கள் நடித்திருப்பேன். அதற்குள் முஸ்லீம் கதாபாத்திரத்தால் ஏதோ பிரச்னை என்று சொல்லி அந்த கதாபாத்திரத்தை நிறுத்திவிட்டார்கள். எனினும், பாகம் 2வில் என்னை ஞாபகம் வைத்து அரசி கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார்கள்' என்று கூறியுள்ளார்.