கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் | ஜனநாயகன் படம் மறு தணிக்கை செல்கிறது : வழக்கை வாபஸ் பெற மனு |

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் 'மழை பிடிக்காத மனிதன்' படம் நாளை மறுநாள் (2ம் தேதி) வெளிவருகிறது. இந்த படத்தில் மேகா ஆகாஷ் ஹீரோயின். சத்யராஜ், தாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, சரண்யா பொன்வண்ணன், ப்ருத்வி அம்பர், தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர். சரத்குமார் வில்லனாக நடிப்பதாக தெரிகிறது. ஆனால் அவரோ நானும் இந்த படத்தில் ஒரு ஹீரோதான் என்கிறார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: விஜய் மில்டனின் முந்தைய படைப்புகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. வெவ்வேறு ஜானர்களை முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்ற அவரது ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன். 'மழை பிடிக்காத மனிதன்' படத்தில் எனக்கு வலுவான கதாபாத்திரம். இருப்பினும், அவர் என்னிடம் கதை சொன்னபோது இந்தப் படத்தில் எனது கதாபாத்திரம் ஹீரோவுக்கு இணையானது என்பதை உணர முடிந்தது. எனது பகுதிகளுக்கு டப்பிங் செய்யும்போது, எனக்கு கதை சொல்லப்பட்டதைவிட திரைக்கதையில் இன்னும் வலுவாக இருப்பதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். எனவே படத்தில் நானும் இன்னொரு ஹீரோதான்.
விஜய் மில்டனுடன் பணிபுரிந்தது ஒரு மகிழ்ச்சியான அனுபவம். தனக்கு என்ன வேண்டும் என்ற துல்லியமான திட்டமிடலும் செயல் வடிவமும் இருந்ததால் முழு படப்பிடிப்பும் இலகுவாக சென்றது. எதிர்காலத்தில் விஜய் மில்டனுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். என்கிறார்.




