நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
பிக் பேங் மூவீஸ் சார்பாக காமராஜ் வேல் தயாரித்து, இயக்கியுள்ள படம் 'அதர்மக் கதைகள்'. இதில் சாக்ஷி அகர்வால், அம்மு அபிராமி, திவ்யா துரைசாமி என 3 ஹீரோயின்கள் தனி தனி கதைகளில் நடிக்கிறார்கள். இவர்களுடன் வெற்றி, பூ ராமு, சுனில் ரெட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஏஆர்.ரெஹானா, எஸ்.என்.அருணகிரி ஹரிஷ் அர்ஜூன், சரண் குமார் என 4 இசையமைப்பாளர்களும், கே.கே, வி.ஷி.பரணி, ராஜிவ் ராஜேந்திரன், ஜெபின் ரெஜினால்ட் என 4 ஒளிப்பதிவாளர்களும், நாகூரான் ராமச்சந்திரன், சதிஷ் குரசோவா, மகேந்திரன் கணேசன், கோபாலகிருஷ்ணன் என 4 எடிட்டர்களும் பணியாற்றியுள்ளனர்.
இதன் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. பழிவாங்கும் த்ரில்லர் கதையாக இந்த கதைகள் உருவாகி உள்ளது. விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது.