அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் | பிரதீப் ரங்கநாதன் , அட்லி புதிய கூட்டணி! | '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தில் கேமியோ ரோலில் சோனியா அகர்வால் | 'வாரணாசி' படத்திற்காக அமெரிக்கா பறந்த ராஜமவுலி! | முறுக்கு மீசை, நீளமான முடி புதிய தோற்றத்தில் அருண் விஜய்! | 'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி |

விஷால் தனது தயாரிப்பு நிறுவனத்திற்காக லைகா நிறுவனத்திடம் வாங்கிய 26 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தவில்லை என்ற வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் லைகா நிறுவனம் மீது விஷால் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
விஷால் பிலிம் பேக்டரி பட நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான 'சண்டக்கோழி- 2' படத்தை வாங்கி வெளியிட்ட லைகா நிறுவனம் தமிழ் மற்றும் தெலுங்கு திரையரங்க மற்றும் சாட்டிலைட் வெளியீடு உரிமைக்கான 12 சதவீத ஜிஎஸ்டி தொகையை செலுத்தாததால் அபராத தொகையுடன் சேர்த்து 4.88 கோடியை நான் செலுத்தியுள்ளேன். நான் செலுத்திய ஜிஎஸ்டி தொகை மற்றும் அபராதத் தொகையை வட்டியுடன் சேர்த்து 5 கோடியே 24 லட்சத்து 10 ஆயிரத்து 423 ரூபாய்க்கு உத்தரவாதம் வழங்குமாறு லைகா நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஏற்கெனவே ஒரு வழக்கு நடந்து வருவதால் இந்த பிரச்னையை கோர்ட்டுக்கு வெளியே பேசி தீர்க்கும்படி நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதனை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில் இந்த இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பிலும் சமரசம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.