விஜய்யின் இரண்டாவது 400 கோடி படம் 'தி கோட்' | சிவகார்த்திகேயனை தவிப்பில் விட்ட ஏஆர் முருகதாஸ் | அஜித்துடன் நடந்த 10 நொடி சந்திப்பு : கவின் | விஜய்க்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் | நாளை வெளியாகும் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாடல் | இந்த கண்டிஷன் ஓகே என்றால் சினிமாவில் நடிப்பேன் - ஜோவிதா பளீச் பேட்டி | வாழ்க்கையிலேயே செய்த பெரிய தவறு பிக்பாஸ் - சக்தி | நவ., 14ல் வர்றோம்... : வந்தாச்சு சூர்யாவின் ‛கங்குவா' புதிய ரிலீஸ் அறிவிப்பு | பதம் பார்த்தது பாலியல் புகார் : ‛ரஞ்சிதமே' பாடல் புகழ் நடன இயக்குனர் ஜானி கைது | கன்னட சினிமாவிலும் பாலியல் தொல்லை : மகளிர் ஆணையத்தில் சஞ்சனா கல்ராணி புகார் |
நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து சமீபத்தில் தமிழில் வெளிவந்த படம் 'மகாராஜா'. இப்படம் வரவேற்பைப் பெற்று 100 கோடி வசூலையும் கடந்தது. தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி அங்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை அமீர்கான் வாங்கியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து அவரே விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாகவும் சொல்கிறார்கள்.
அமீர்கான் கடைசியாக நடித்து வெளிவந்த படம் 'லால் சிங் சத்தா'. 2022ல் வெளிவந்த அப்படம் படுதோல்வியை சந்தித்தது. தற்போது 'சித்தாரே ஜமீன் பர்' படத்தில் நடித்து வருகிறார். இந்த வருட கிறிஸ்துமஸ் தினத்தன்று இப்படம் வெளியாக உள்ளது.
இன்றைய ஓடிடி யுகத்தில் ரீமேக் படங்களுக்கு தியேட்டர்களில் வரவேற்பு குறைவாகவே உள்ளது. இருப்பினும் அமீர்கான் 'மகாராஜா' ஹிந்தி ரீமேக் உரிமையை வாங்கியிருப்பது கதை மீது அவருக்கு இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக உள்ளது என்கிறார்கள்.