ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
நடிகர் தனுஷ் இன்று தன்னுடைய 42வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். இரு தினங்களுக்கு முன்புதான் தனுஷ் இயக்கம், நடிப்பில் 'ராயன்' திரைப்படம் வெளிவந்தது. அப்படத்தில் தனுஷ் தங்கையாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். அவருடைய நடிப்பிற்கும் ரசிகர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
தனுஷ் பிறந்தநாளுக்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்து, “25 நவம்பர் 2023, என்னால் என்றும் மறக்க முடியாத நாள். ‛தனுஷ் 50' படத்திற்காக தனுஷ் சார் என்னை சந்திக்க விரும்புவதாக அழைப்பு வந்தது. அது எல்லாம் எனக்கு நம்ப முடியாத ஒன்றாக இருந்தது. கடைசியாக அவரைச் சந்தித்தது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு உணர்வு.
இன்று, ராயன் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியுள்ளது. தனுஷ் சாரின் இந்த வெற்றியை என்னுடையது போல உணர்கிறேன். இந்த பயணத்தின் மூலம் நான் அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். சும்மா நிற்பதில் இருந்து ஒவ்வொரு விஷத்திற்கும் அது முற்றிலும் ஊக்கமாக இருந்தது. சார், நீங்கள் ஒரு உண்மையான முன்மாதிரியானவர். துர்கா வேடத்தில் என்னை நம்பியதற்கு நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.