'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கவுதம் மேனன் முதல் முறையாக மலையாளத்தில் ஒரு திரைப்படத்தை இயக்குகிறார். நடிகர் மம்முட்டியின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் அப்படத்தில் மம்முட்டி தான் கதாநாயகனாக நடிக்கிறார்.
சமீபத்தில்தான் இந்தப் படத்தின் பூஜை நடைபெற்றது. பொதுவாக ஒரு மொழியிலிருந்து மற்ற மொழிகளிலும் படம் இயக்கச் செல்லும் இயக்குனர்கள், தங்களுடன் ஏற்கெனவே இருக்கும் உதவி இயக்குனர்களையும் அழைத்துச் செல்வர். மற்ற மொழிகள் தெரியாத இயக்குனர்கள் அந்த மொழி தெரிந்த உதவி இயக்குனர்கள் சிலரையும் புதிதாக வேலைக்கு வைத்துக் கொள்வார்கள்.
ஆனால், நடிகர் மம்முட்டி இந்த விஷயத்தில் கவுதம் மேனனுக்கு கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளதாகச் சொல்கிறார்கள். சென்னையிலிருந்து கவுதம் மேனனின் உதவி இயக்குனர்கள் யாரும் வரக் கூடாது என்று சொல்லிவிட்டாராம். மலையாளத் திரையுலகத்திலிருந்து உதவி இயக்குனர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.
இந்த விவகாரம் இங்குள்ள தமிழ் சினிமா இயக்குனர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.