‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தற்போது கதாநாயகனாக நடித்துக்கொண்டிருக்கும் அர்ஜூன், தனது மகள் ஐஸ்வர்யாவை, விஷால் நடித்து வரும பட்டத்து யானை படத்தில் அறிமுகம் செய்துள்ளார். இப்படத்தில் காதல் மட்டுமின்றி காமெடி காட்சிகளிலும் அவர் அற்புதமாக நடித்து வருவதாக விஷால் உள்பட அப்படத்தின் முக்கிய கலைஞர்கள் அனைவரும் பில்டப் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், திருச்சியில நடந்து வரும் அப்படத்தின் படப்பிடிப்பில், வில்லன்கள் துரத்துவது போன்ற காட்சியில் விஷாலுடன் ஓடியபடி நடித்தபோது ஐஸ்வர்யா மயங்கி விழுந்து விட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த செய்தியை மறுத்துள்ளார் அவர். அன்று முழுக்க வெயிலில்தான் ஓடியபடி நடித்தேன். ஆனால், மயங்கியெல்லாம் விழவில்லை. அந்த அளவுக்கு என்னை கஷ்டப்படுத்தவும் இல்லை என்று கூறியுள்ள ஐஸ்வர்யா, இருப்பினும் உண்மைக்கு புறம்பாக யாரோ செய்தி பரப்பி விட்டுள்ளனர் என்கிறார்.