சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

விக்ரம் நடிப்பில் எதிர்பார்க்கப்படும் படம் 'தங்கலான்'. பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ரஞ்சித் இயக்கி உள்ளார். ஞானவேல் ராஜா படத்தை தயாரித்துள்ளார். கோலார் தங்க வயல் பின்னணியில் பீரியட் படமாக உருவாகியுள்ளது.
விக்ரம் கேரியரில் இந்த படம் முக்கியமானதாக கருதப்படுகிறது. இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிக் கொண்டே போன நிலையில் தற்போது ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியிடப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேப்போன்று தியாகராஜன் இயக்கத்தில் அவரது மகனும், நடிகருமான பிரசாந்த் நடிப்பில் நீண்டகால தயாரிப்பில் உள்ள படம் ‛அந்தகன்'. பிரியா ஆனந்த், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் டிரைலர் வெளியான நிலையில் ஆக., 15ல் படம் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.