‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி | ‛காந்தாரா' கண்டெடுத்த அய்ரா | பிரியதர்ஷனின் ‛ஹைவான்' ஹிந்தி படத்தில் சிறப்பு தோற்றத்தில் மோகன்லால் | ராமன் தேடிய சீதை, பாட்ஷா, குடும்பஸ்தன் - ஞாயிறு திரைப்படங்கள் | இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் |

நடிகர் திலகம் சிவாஜியின் நினைவு தினம் நாளை(ஜூலை 21) அனுசரிக்கப்டுகிறது. இதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அவற்றில் முக்கியமான நிகழ்ச்சியாக முதல் நிகழ்ச்சியாக நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடக்கிறது. பாரத் கலாச்சார், சிவாஜி ரசிகர் மன்றம், அப்பாஸ் கல்சுரல் அமைப்புகள் இணைந்து இதனை நடத்துகின்றன.
நாளை மாலை 6 மணிக்கு தி.நகர் பத்மசேஷாத்திரி பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஒய்ஜிபி ஆடிட்டோரித்தில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. 'மன்னவன் வந்தானடி' என்ற தலைப்பில் சிவாஜியின் படங்களில் இடம் பெற்ற பாடல்களுக்கு டாக்டர் ராதி சுராஜித் குழுவினர் நடனமாடி சிவாஜிக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், நடன கலைஞர் பத்மா சுப்ரமணியம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள்.