Advertisement

சிறப்புச்செய்திகள்

குபேரா படத்தின் புதிய போஸ்டர் வெளியானது! | செப்.10ம் தேதி வெளியாகும் தேவாரா பட டிரைலர்! | டெல்லி கணேஷ், சி.ஆர். விஜயகுமாரிக்கு ‛கலையுலக வாழ்நாள் சாதனையாளர்' விருது | கமல்ஹாசன் இடத்தை நிரப்புவாரா விஜய் சேதுபதி? | 27வது ஆண்டில் சூர்யா: 44வது படத்தின் போஸ்டர் வெளியானது! | ரஜினியின் வேட்டையன் படத்தின் முதல் பாடல்: செப்டம்பர் 9ம் தேதி வெளியாகிறது! | விஜய் கட்சியின் மாநாடு- 50 ஆயிரம் பேருக்கு அனுமதி கொடுத்த காவல்துறை! | தமிழில் முதல் 'பான் இந்தியா' படம் 'கங்குவா' தான், ஏன்? | சிம்ரன் நடிக்கும் 'தி லாஸ்ட் ஒன்' | கருமேகங்கள் விலகட்டும் ; ஹேமா கமிஷன் குறித்து மனம் திறந்த மஞ்சு வாரியர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

28 ஆண்டுகளுக்குப் பிறகான கூட்டணி தந்த அதிர்ச்சி... : 38 ஆண்டுகளுக்குப் பிறகான கூட்டணி தருமா மலர்ச்சி

20 ஜூலை, 2024 - 10:53 IST
எழுத்தின் அளவு:
After-28-years,-the-alliance-gave-a-shock...-:-After-38-years,-the-alliance-will-give-blossom

அரசியலில் மட்டும்தான் கூட்டணி என்பதில்லை, சினிமாவிலும் கூட்டணி என்பது மிக முக்கியம். இயக்குனர், இசையமைப்பாளர், நாயகன் ஆகியோரது கூட்டணி என்பது டாப் நடிகர்களுக்கு முக்கியமான ஒரு கூட்டணி. அப்படியான கூட்டணியில் பல சாதனைப் படங்கள், முக்கிய படங்கள் வெளிவந்துள்ளன.

1996ம் ஆண்டில் டாப் நடிகராக இருந்த கமல்ஹாசன், அப்போது வளர்ந்து வந்த இயக்குனர் ஷங்கர் உடன் இணைந்து 'இந்தியன்' படத்தைக் கொடுத்தார். கூடவே தன் இசையால் இளைஞர்களை வசீகரித்த ஏஆர் ரஹ்மான் வேறு. கதை, திரைக்கதை, காட்சிகள், காதல், காமெடி, பாடல்கள், வர்மக்கலை என என்னென்னமோ செய்து ரசிகர்களை வசீகரித்தார்கள். தமிழ் சினிமாவின் முக்கிய கமர்ஷியல் படங்களில் அதுவும் ஒன்று.

28 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன், ஷங்கர் கூட்டணி மீண்டும் இணைந்து கடந்த வாரம் வந்த 'இந்தியன் 2' படம் முதல் பாகத்தின் வரவேற்பையும், வெற்றியையும் நெருங்கவில்லை என்பது ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை. பெரிதும் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு வருத்தமே மிஞ்சியது, பலரும் அதிர்ச்சியைத் தந்தது.

இருந்தாலும் 38 வருடங்களுக்குப் பிறகு அடுத்தாண்டு வெளியாக உள்ள கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் வர உள்ள 'தக் லைப்' நோக்கி ரசிகர்களின் பார்வை சென்றுள்ளது. இந்தக் கூட்டணியாவது தங்களுக்கு மலர்ச்சியைத் தரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சிவ ஆனந்த் சமீபத்திய பேட்டி ஒன்றில், “படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. படத்தில் நிறைய விஷயங்களை செய்திருக்கிறோம். வெற்றிக்குத் தேவையான அது தியேட்டர்களில் பிரகாசிக்கும்,” என்று சொல்லியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
விடாமுயற்சியில் இளமையான அஜித் : வெளியான போஸ்டர்விடாமுயற்சியில் இளமையான அஜித் : ... 'விடுதலை 2'க்கு பேருதவியாக அமைந்த 'மகாராஜா' வெற்றி 'விடுதலை 2'க்கு பேருதவியாக அமைந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Sridhar - Jakarta,இந்தோனேசியா
20 ஜூலை, 2024 - 03:07 Report Abuse
Sridhar கமலாஹாசன் நடிச்சி எந்த படமும் பெருவெற்றி பெற்றதா சரித்திரமே இல்ல. ரெட் ஜெயண்ட் வச்சு எதோ கொஞ்சம் விக்ரம் படத்த ஓடவச்சு அவுங்க பணம் நிறம் மாற வசதி பண்ணினாங்க. ரெட் ஜெயண்ட் தவிர வேற யாராவது பணம் போட்டு எடுத்திருந்தாங்கன்னா, பாவம் அதோகதிதான்
Rate this:
Balamurugan - coimbatore,இந்தியா
20 ஜூலை, 2024 - 01:07 Report Abuse
Balamurugan ஊழல் செய்யாதே என அறிவுரை கூறுபவன் ஊழல் கட்சியுடன் கூட்டணி வைத்தால் அதை மக்கள் எப்படி ஏற்பார்கள். அது தான் படம் ஊத்திக்கிச்சு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in