பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
கடந்த 2021ம் ஆண்டு நாக சைதன்யாவிடம் இருந்து விவாகரத்து பெற்றார் சமந்தா. அதன்பிறகும் சினிமாவில் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டு வருகிறார். அதிலும் புஷ்பா படத்தில் கவர்ச்சி நடனமாடி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இடையில் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தார். சமீபத்தில் விவாகரத்துக்கு பிறகு தான் சந்தித்த விஷயங்கள் குறித்து ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் சமந்தா.
அதில், ‛‛வாழ்க்கையில் சில விஷயங்களை மாற்ற வேண்டுமென்று நினைப்போம். குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் என்னுடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் எல்லாம் நடந்திருக்கக் கூடாது என்று தான் நினைக்கிறேன். என்றாலும் எதுவும் நம் கையில் இல்லை. வாழ்க்கை என்ன கொடுக்கிறதோ அதை நாம் சந்தித்து தான் ஆக வேண்டும். அனைவர் வாழ்க்கையிலும் பிரச்னைகள், வலிகள் இருக்கிறது. அதை நாம் எப்படி கடந்து வருகிறோம் என்பது தான் முக்கியம். அந்த வலியை கடந்து விட்டால் நாம் வெற்றியாளர்தான். அந்த வகையில் நான் தற்போது என்னை வலிமையானவளாக உணர்கிறேன். குறிப்பாக ஆன்மிகம் தான் எனது வலியை கடந்து வலிமை பெற எனக்கு உதவி செய்தது'' என்று கூறியுள்ளார்.