ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் மற்றும் பலர் நடித்து வரும் படம் 'புஷ்பா 2'. இப்படத்தை ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிடப் போவதாக முதலில் அறிவித்திருந்தார்கள். ஆனால், திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடியாததால் படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைத்து டிசம்பர் 6ம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார்கள்.
தற்போதைய நிலவரப்படி அப்போதும் படம் வெளியாக வாய்ப்பில்லை என்கிறார்கள். அதனால், 2025ம் ஆண்டுக்கு படம் தள்ளிப் போனாலும் ஆச்சரியமில்லையாம். 'கல்கி 2898 ஏடி' படத்தின் வரவேற்பும், வசூலும் இந்தப் படக்குழுவினரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாம். வேறொரு பிரம்மாண்டத்தை அந்தப் படத்தில் காட்டியிருந்தார்கள். அதற்கு ஈடாக 'புஷ்பா 2' படத்திலும் இருந்தால்தான் ரசிகர்களைக் கவர முடியும், பெரும் வசூலைக் குவிக்க முடியும் என்று ஆலோசித்து வருவதாகத் தகவல்.
டோலிவுட்டில் பரவி வரும் இந்தத் தகவல் உண்மையா, பொய்யா என்பது சில வாரங்களில் தெரிந்துவிடும்.