டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

கமல்ஹாசன், சித்தார்த், ரகுர் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் 'இந்தியன் 2'. ஷங்கர் இயக்கத்தில் இதுவரை வெளிவந்த படங்களுக்கு சமூக வலைத்தளங்களில் அதிகமான விமர்சனங்களும், கருத்துக்களும், மீம்ஸ்களும் வெளிவந்ததில்லை. ஆனால், 'இந்தியன் 2' படத்திற்கு அவையனைத்தும் தொடர்ந்து அதிகமாக வந்து கொண்டே இருக்கிறது. பலரும் பல்வேறு விதமாக விமர்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஷங்கருக்கு ஆதரவாக '40 கதை கேட்டு தூங்கிய' புகழ் நடிகர் அஷ்வின் குமார் ஆதரவு தெரிவித்து பதிவிட்டுள்ளார். அவர் கதாநாயகனாக அறிமுகமான 'என்ன சொல்லப் போகிறாய்' படத்தின் இசை வெளியீட்டின் போது, “40 கதைகளைக் கேட்டு தூங்கிவிட்டேன்,” என அவர் பேசினார். அப்போது சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் அஷ்வின் குமார். இப்போது 'நொடிக்கு நொடி' படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.
தனது இன்ஸ்டாவில் ஷங்கருக்கு ஆதரவு தெரிவித்து, “இந்திய சினிமாவிற்கு ஷங்கர் சார் கிப்ட், எப்போதுமே பெருமையுடன் இருப்பவர். இந்திய சினிமாவிற்கு பிரம்மாண்டத்தை அறிமுகப்படுத்திய அவர் மீது மரியாதையுடனும், அன்புடனும் இருங்கள். குறிப்பு : கீ போர்டு வாரியர்கள் அனைவருக்கும் இதை சமர்ப்பிக்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவை அவர் ஸ்டோரியாக மட்டுமே போட்டிருப்பதால் அதில் யாராலும் கமெண்ட் செய்ய முடியாது. இருந்தாலும், அந்தப் பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பலரும் அஷ்வினை விமர்சித்து வருகிறார்கள்.
இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்பது தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை 1948ல் வெளிவந்த 'சந்திரலேகா' உள்ளிட்ட சில பல படங்களில் அந்தக் கால இயக்குனர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை யாராவது அஷ்வினுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.