'சக்திமான்' ஆக ரன்வீர் சிங்: பசில் ஜோசப் உறுதி | கோவை தமிழ் பிடிக்கும்: கிர்த்தி ஷெட்டி | அஜித் படத்தை இயக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை! சொல்கிறார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் | 'ஜனநாயகன்' கடைசி படமா? இல்லையா? இன்னும் முடிவெடுக்காத விஜய்! | ஜூலை 4ம் தேதி திரைக்கு வரும் சூர்யா சேதுபதியின் 'பீனிக்ஸ் வீழான்' | பிரகாசமான எதிர்காலம்: விஜய் வெளியிட்ட அறிக்கை! | அருண்குமார் இயக்கத்தில் நடிக்க தயாராகும் கமல்ஹாசன்! அன்பறிவ் இயக்கும் படம் தள்ளிப் போகிறது! | போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது | சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' | 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… |
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்து வெளிவந்த 'கல்கி 2898 ஏடி' படத்தில் கமல்ஹாசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். அதில் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும், இரண்டாம் பாகத்தில் பிரபாஸ், கமல் மோதல் அதிகம் இருக்கும் என்கிறார்கள்.
இப்படம் 1000 கோடி வசூலைக் குவித்து இன்னமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் புரமோஷனை படக்குழு தொடர்ந்து செய்து வருகிறது. நேற்று கமல்ஹாசன் பேசிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
கேஷுவலாக எடுக்கிறோம் என எடுத்துள்ள அந்த வீடியோவில் கமலுக்கு ஒரு போன் கால் வருகிறது, அதை கட் செய்து விட்டு, “தெரியும், இது எதற்கு என்று. கல்கி பெரிய ஹிட். இன்னொரு மெசேஜ் 300 கோடி, அப்புறம் 500 கோடி, 600, 700 அப்படி சொல்வாங்க. இது மகிழ்ச்சியான தருணம். நான் என்ன சொல்ல விரும்பறேன்னா, 250 படங்களுக்கு மேல நடிச்சிருக்கேன். அதுல ஒண்ணு ரெண்டு மோசமா இருக்கும். ஆனால், இந்தப் படம் மாதிரி எதுக்கும் ஒரு 'அட்டென்ஷன்' கிடைச்சதில்ல. இப்படி கிடைக்கும் போது அதை கண்டிப்பா கொண்டாடணும்.
இது ஒரு அபத்தமான நிலை, நாம என்ன செய்றோம்னு நமக்குத் தெரியாது. ஆனால், அதை உள்வாங்கிக்கிறோம். இந்த யாஷ்கினை நாங்கள் சேர்ந்து செய்தோம். அவர் அதை செதுக்கினார், அவர் உணி கொண்டு வந்தார், நான் சுத்தியலை கொண்டு வந்தேன். நாங்கள் அந்த உருவத்தை வடித்தோம். இந்தப் படத்தில் நான் சிறிது நேரம் மட்டுமே வருகிறேன் என்று சொன்னார்கள் . நான் கெட்டப்பைப் பார்த்தேன். அப்போதும் எனக்கு அசௌகரியம் ஏற்பட்டிருந்தால் நான் அதிலிருந்து நழுவி இருக்கலாம். ஆனால், போகப் போக எனக்கு உற்சாகமாக இருந்தது.
இந்தியாவின் சில பெரிய நட்சத்திரங்கள் ஒன்றாக இணைந்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். நாக் அஷ்வினுக்கு சிங்கீதம் சீனிவாசராவ் போன்ற குழந்தை மனம் உள்ளது. அது வளர்க்கப்பட வேண்டும். இரண்டாம் பாகத்தில் யாஷ்கினின் செயல்களை நீங்கள் பார்க்கலாம். வசூல் பற்றி நான் பேசப்போவதில்லை, மகிழ்ச்சி பற்றி பேச விரும்புகிறேன். கல்கியால் நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம், அதைக் கொண்டாடுகிறோம், தயவு செய்து எங்களுடன் நீங்களும் கொண்டாடுங்கள்,” என்று பேசியுள்ளார் கமல்.