‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! | உங்களை விட்டால் யார் இருக்கா ? அனுஷ்காவிடம் ராணா கலாட்டா | பிஜூமேனன் நடிப்பதாக இருந்த ‛கீர்த்தி சக்ரா' ; மோகன்லாலுக்கு கை மாறியது ஏன் ? இயக்குனர் மேஜர் ரவி புதிய தகவல் | நிவின்பாலியின் படங்களை பாராட்டிய பவன் கல்யாண் | ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' | யார் இடத்தையும் யாரும் பிடிக்கவில்லை: சிவகார்த்திகேயன் |
வாரிசு நடிகர்கள் வருவது ஒன்றும் புதிதல்ல. எல்லா காலத்திலும் உண்டு. அதில் ஒரு சிலரே வெற்றி பெறுகிறார்கள். மற்றவர்கள் தோல்வி அடைகிறார்கள். அப்படியானவர்களில் ஒருவர் தான் பி.யு.சி ராஜா பகதூர். தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர். அவர் காலத்தில் அவருக்கு எதிர் களத்தில் நின்றவர் பி.யு.சின்னப்பா. தமிழ் சினிமாவின் முதல் ஆக்ஷன் ஹீரோ. அவரது மகன் தான் பி.யு.சி.ராஜா பகதூர்.
திரையுலகின் உச்சியில் இருந்த பி.யு.சின்னப்பா மறைவிற்கு பிறகு அவரது குடும்பம் வறுமைக்கு தள்ளப்பட்டது. அந்த காலகட்டத்தில் நடிக்க வந்தார் பி.யு.சி ராஜா பகதூர். சாண்டோ சின்னப்ப தேவர் தயாரித்த “வாழ வைத்த தெய்வம்” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு 'கோயில் புறா' படத்தில் குணச்சித்திர வேடத்தில் நாதஸ்வர வித்வானாக நடித்தார். இதைத் தொடர்ந்து வில்லன் வேடங்களில் வாயில்லாப்பூச்சி, ஒரு குடும்பத்தின் கதை, சிவாஜி நடித்த 'தியாகி' போன்ற படங்களில் நடித்தார்.
அதன்பிறகு பெரிய வாய்ப்பு இல்லாமல் இருந்த அவர் நீண்ட இடைவெளிக்குபிறகு 'கரகாட்டக்காரன்' படத்தில் மட்டன் கடை நடத்துகிறவராக, அதாவது வில்லனாக நடித்தார். அதன்பிறகு சிறிய கேரக்டர்களில் நடித்தார். சிலகாலம் டப்பிங் கலைஞராக பணியாற்றினார்.
பின்னர் குடி பழக்கத்திற்கு அடிமையாகி அதனால் நோயுற்று காலமானார். கடைசிவரை அவர் ஆசைப்பட்டதெல்லாம் ஒரு படத்திலாது ஹீரோவாக நடித்து அது வெற்றி பெற வேண்டும் என்பதே. அது கடைசிவரை நிறைவேறால் போனது.