நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தொழில் அதிபர் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சென்ட் திருமணம் சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதில் பங்குகொண்டவர்கள் தனித்தனியாக சென்று மணமக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். சல்மான்கான், அர்பிதா கான் இணைந்து மணக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். சில நிமிடங்களுக்கு பிறகு ஐஸ்வர்யாராய் மணமக்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். ஆனால் சல்மான்கானும், ஐஸ்வர்யாராயும் ஒன்றாக திருமண விழாவில் போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போன்று சித்தரித்து படம் வெளியானது.
முன்னாள் காதலன் சல்மான்கானுடன் நெருக்கம் காட்டும் ஐஸ்வர்யா என்பது மாதிரியான செய்திகள் இந்த போலி படத்துடன் வெளியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யாராய் இது பற்றி கூறுகையில், ‛‛எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருக்கிறது. திருமணமான ஒரு பெண்ணை அதுவும் ஒரு பெண்ணுக்கு தாயான ஒரு பெண்ணைபற்றி இப்படியா பேசுவது.. புரளியை கிளப்பும் இந்த சமூகத்தில் வாழ்வதற்கே அருவருப்பாக உள்ளது,'' என்று கூறியுள்ளார்.