போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் |
ஆன்மிக மற்றும் தியான அமைப்பு 'வாழும் கலை'.இதன் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர். இவர் பல அமைப்புகளின், நாடுகளின் நல்லெண்ண தூதராகவும் இருந்து வருகிறார்.
கொலம்பியாவில் அரசுக்கும், புரட்சிகர ஆயுத முன்னணி என்ற அமைப்புக்கும் 50 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வந்தது. இந்தப்போர் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் கடந்த சில வருடங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர். இதன்மூலம் உலகப்புகழ் பெற்றார்.
இந்த அமைதிப் பணியின்போது அவர் சந்தித்த அனுபவங்கள் தற்போது திரைப்படமாகிறது. திரில்லர் பாணியில் உருவாகும் இதை ஹிந்தியில் பதான், வார், பைட்டர் படங்களை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார். மகாவீர் ஜெயின் தயாரிக்கிறார். படத்தின் ஆரம்பகட்ட பணிகள் முடிவடைந்திருக்கிறது. இதில் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் நடிக்கிறார்கள்.