பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்து நேற்று முன்தினம் வெளிவந்த படம் 'இந்தியன் 2'. இப்படம் மொத்தம் மூன்று மணிநேரம் ஓடக் கூடிய படமாக தணிக்கை பெற்றுள்ளது. படத்தைப் பார்த்த பலரும் படத்தின் நீளம் அதிகம், சில தேவையற்ற காட்சிகளை குறைத்திருக்கலாம் என்ற விமர்சனங்களை முன் வைத்தார்கள்.
அதனால், படத்தின் நீளம் இருபது நிமிடங்கள் வரை குறைக்கப்படுகிறது என்று நேற்று மாலை முதல் ஒரு தகவல் பரவி வருகிறது. தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் அது போன்றே குறைக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து இதுவரை அது பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
சாதாரண நடிகர், இயக்குனரின் படமென்றால் பரவாயில்லை. ஷங்கர், கமல்ஹாசன் இணைந்த ஒரு பெரிய படத்திற்கு விமர்சனங்களுக்குப் பிறகு இப்படி ஒரு நீளக் குறைப்பு நடக்குமா என்பது சந்தேகம்தான் என்றும் ஒரு பக்கம் சொல்கிறார்கள். அப்படி செய்தால் தங்களது படத்தைப் பற்றி சரியாகக் கணித்து படத்தின் நீளத்தை வைக்க முடியவில்லையா என்ற விமர்சனங்களும் ஷங்கர், கமல் மீது எழ வாய்ப்புள்ளது.