'மகாராஜ்' படத்தில் சர்ச்சை காட்சியில் நடித்தது ஏன்: ஷாலினி பாண்டே விளக்கம் | தனுஷ் ஒரு மிகச் சிறந்த மனிதர்! - சொல்கிறார் ரோபோ சங்கர் | 45வது படத்தில் வக்கீலாக நடிக்கும் சூர்யா! | டிச.,18ல் ஓடிடியில் வெளியாகும் ‛கேர்ள்ஸ் வில் பி கேர்ள்ஸ்' | இயக்குனர் கே. எஸ். ரவிக்குமாரின் தாயார் மரணம்! | விடாமுயற்சி டப்பிங் பணிகளை தொடங்கிய அஜித்குமார்! | ரஜினி பிறந்த நாளில் கீர்த்தி சுரேஷ் திருமணம்! | கூலி படத்தில் இணைந்த ரெபா மோனிகா ஜான், சந்தீப் கிஷன் | பாலிவுட்டில் அறிமுகமாகும் பஹத் பாசில் | 4கே-வில் ரீ-ரிலீஸ் ஆகும் வேலையில்லா பட்டதாரி தெலுங்கு பதிப்பு |
இந்திய நாட்டை மட்டுமல்லாது, உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள ஒரு திருமணமாக அம்பானி குடும்பத்துத் திருமண நிகழ்வுகள் அமைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் ஒரு நிகழ்வு என கடந்த சில நாட்களாக பல சினிமா பிரபலங்கள் விதவிதமான ஆடைகளில் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டு வருகின்றனர்.
தமிழ் சினிமா உலகிலிருந்து நடிகர் ரஜினிகாந்த், நடிகை நயன்தாரா உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டுள்ளனர். வட இந்தியத் திருமணங்கள் என்றாலே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் ஆகியவற்றிற்குப் பஞ்சமிருக்காது. வயது வித்தியாசம் இல்லாமல் சிறியவர் முதல் முதியவர் வரை நடனமாடி திருமண நிகழ்வை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.
திருமண வீட்டார் மட்டுமல்லாது, திருமணத்திற்கு வந்தவர்களும் அந்த கொண்டாட்டங்களில் ஆடிப்பாடி மகிழ்வார்கள். அப்படித்தான் அம்பானி வீட்டுத் திருமண நிகழ்வில் சக பிரபலங்களுடன் ரஜினிகாந்த் நடனமாடினார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. ரஜினிகாந்த் போன்ற ஒரு உச்ச நடிகர் இப்படி நடனம் ஆடலாமா என்ற சர்ச்சையையும் சமூக வலைத்தளங்களில் ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் ரஜினி ரசிகர்கள் 'தலைவர் மாஸ், தலைவர் ஸ்டைல்' என அதையும் மகிழ்வுடன் பகிர்ந்து வருகிறார்கள்.