‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
என்னதான் நடிகர்களின் வாரிசு என்றாலும், முதல் இரண்டு படங்களில் கேமராவுக்கு முன்பு அவர்களால் நூறு சதவிகித நடிப்பை வெளிப்படுத்துவது என்பது இயலாத காரியம். ஆனால் பட்டத்துயானை படத்தில் தன்னுடன் ஜோடி சேர்ந்துள்ள அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா எந்தவித குழப்பமோ, அச்சமோ இல்லாமல் சூப்பராக நடித்தார். அதைப்பார்த்து நானே மிரண்டு விட்டேன் என்று தனது கோலிவுட் நண்பர்களிடம் வண்டி வண்டியாய் கொட்டி வருகிறார் விஷால்.
குறிப்பாக, பட்டத்து யானை படத்தில் ரொமான்ஸ் காட்சிகளில் ஐஸ்வர்யாவுடன் நெருக்கமாக நடிக்க நான் தயங்கி நின்றேன். ஆனால் அவரோ, அந்த காட்சியின் பீலிங்ஸை வெளிப்படுத்த என்னுடன் தானே முன்வந்து நடித்தார். இது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒரு நடிகரின் மகள் என்பதோடு, அவர் உடம்பில் நடிப்பு ரத்தம் ஓடுவதால்தான் காட்சிக்கேற்ப தன்னை முழுசுமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் ஏற்பட்டது. அப்படிப்பார்க்கையில், ஐஸ்வர்யா பெரிய நடிகையாகி விட நிறைய வாய்ப்பு உள்ளது என்று தனது அபிமான டைரக்டர்களிடம் அவரது புராணம் பாடுகிறார்.