பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் | விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் | துணை நடிகர் ஜெயசீலன் காலமானார் | பிளாஷ்பேக் : தேசிய விருதை இழந்த மீனா | விஷால் உடல்நலம் குறித்து அவதூறு : 3 யு-டியூப் சேனல்கள் மீது வழக்கு | 15 ஆயிரம் கோடி குடும்ப சொத்தை இழக்கிறார் சைப் அலிகான் |
வேட்டையன் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் தற்போது நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி உள்ளது. இந்த படப்பிடிப்பில் ரஜினி உடன் ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா உள்ளிட்ட சிலர் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது இப்படத்தில் மாஸ்டர் மகேந்திரனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இவர் கடந்த 2021ம் ஆண்டு விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் சிறுவயது விஜய் சேதுபதியாக நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் லோகேஷ் இயக்கத்தில் இணைந்திருக்கும் மாஸ்டர் மகேந்திரன், அது குறித்த ஒரு வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், இந்த கூலி படத்தில் நடிகர் சத்யராஜ், அபிராமி உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.