என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
நடிகை சமந்தா கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக தசை நார் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அவர், அவ்வபோது உடல் ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி குறித்த டிப்ஸ்களையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தனக்கு இருந்த சுவாச பிரச்னை தொற்றுக்கு ஹைட்ரஜன் பெராக்ஸைடு பயன்படுத்தியதாக சமீபத்தில் ஒரு பதிவிட்டிருந்தார் சமந்தா. ஆனால் டாக்டர் சிரியாக் ஏ.பி பிலிப்ஸ் என்பவர் சமந்தாவின் இந்த பதிவுக்கு கண்டனம் தெரிவித்து மருத்துவர்கள் மட்டுமே பரிந்துரைக்க வேண்டிய மருத்துவ விஷயங்களை சமந்தா இப்படி கூறி இருப்பது துரதிஷ்டவசமானது. இதனால் சமந்தாவுக்கு அபராதம் விதிக்க வேண்டும் அல்லது அவரை சிறையில் கூட அடைக்கலாம் என்று கூறியுள்ளார்.
அதேசமயம் இதற்கு விளக்கம் அளித்த சமந்தா, என்னை சிறையில் அடைக்க வேண்டும் என்கிற அளவிற்கு டாக்டர் கடுமையாக பேசியுள்ளார். அவர் என்னை விமர்சிப்பதற்கு பதிலாக இந்த பதிவுடன் டேக் செய்துள்ள எனது டாக்டருடன் உரையாடுவது தான் சரியாக இருக்கும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இந்த சர்ச்சையை கவனித்து வந்த கிராமி விருது வென்ற இந்தியா-அமெரிக்க இசை அமைப்பாளர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலரான ரிக்கி கேஜ் சமந்தாவின் மருத்துவ ஆலோசனை குறித்து தனது கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
சமந்தாவின் பதிவு மற்றும் டாக்டருக்கான பதிலடி குறித்து அவர் கூறும்போது, “நீங்கள் விரைவில் நலமாக வேண்டும்.. நிறைய கஷ்டங்களை சந்தித்திருப்பீர்கள்.. அதேசமயம் மருத்துவ அறிவுரை என்று வரும்போது அது மருத்துவர்கள் அல்லாத நபர்களால் அதுவும் உங்களைப் போன்ற பிரபலங்களால் சொல்லப்படும்போது மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும். உங்களை வார்த்தைகளால் தாக்கிய மருத்துவர் நடந்து கொண்ட விதம் வேண்டுமானால் கடுமையாக இருக்கலாம். ஆனால் அவர் சொன்னது முற்றிலும் தவறல்ல. அரைகுறையான அறிவுரையுடன் ஒருவர், அதுவும் உங்களைப் போன்ற பிரபலமான நபர் மக்களின் உயிருடன் விளையாடக் கூடாது” என்று கூறியுள்ளார்.