'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி | ஹீரோக்களை ஓரங்கட்டிய பிசாசு நடிகை | அரசியல்: கோபத்தில் கொந்தளிக்கும் நடிகர் | பிளாஷ்பேக்: சிவாஜி - சவுகார் ஜானகி இணைந்து நடித்த முதல் திரைக்காவியம் “படிக்காத மேதை” | திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா லாரன்ஸ்? ஜூன் 11ல் முக்கிய அறிவிப்பு | 'திரிஷ்யம்-3' ஹிந்தி பதிப்பு மாறுபட்ட கதை: அஜய் தேவ்கன் |

பிரபல சின்னத்திரை நடிகையான நீலிமா ராணி, வானத்தைப் போல தொடரில் நடித்து வருகிறார். இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு சற்று பிரேக் எடுத்துக் கொண்ட அவர் தற்போது கம்பேக் கொடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், தனது கணவர் குறித்தும் சமூகத்தில் திருமண உறவில் ஏற்படும் மோசமான மாற்றங்கள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் அந்த பேட்டியில், 'என்னுடைய கணவருக்கும் எனக்கும் 10 வயது வித்தியாசம். எனக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கிறார். என்னுடைய எனர்ஜிக்கு அவர் தான் காரணம். திருமணம் செய்யும்போது ஒருவர் அதிக புரிதலுடனும், மற்றொருவர் குறைவான புரிதலுடனும் இருப்பார்கள். ஆனாலும் அது நன்றாகத்தான் இருக்கும். இப்போது இருக்கும் காலக்கட்டத்தில் ஒருவருடன் பழகி, காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரு மாதத்திலேயே பிரிந்து விடுகிறார்கள். இதை தவறில்லை என்றும் சிலர் கூறுகிறார்கள். இதுதான் தற்போது பரவலாக நடைபெற்று வருகிறது. சொல்லப்போனால் ஒருவனுக்கு ஒருத்தி என்று கூறுவதையே கிரிஞ்ச் என்கிறார்கள். இது மிகவும் தவறான விஷயம்' என்று அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.