2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
சினிமா, சின்னத்திரை என அங்கொன்றும் இங்கொன்றுமாய நடித்து வந்த சரண்யா துராடிக்கு சொல்லிக்கொள்ளும் வகையில் எந்த ப்ராஜெக்ட்டும் பெரிதாக கைகொடுக்கவில்லை. வாய்ப்புக்காக தேடி அலைந்த அவருக்கு கடைசியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வரப்பிரசாதமாக அமைந்தது. அவரும் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பெர்பார்மென்ஸில் கலக்கி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வந்தார்.
இந்நிலையில், விபத்து ஒன்றில் சிக்கிய அவருக்கு காலில் அடிப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சரண்யா, 'சமீபத்தில் காலில் ஏற்பட்டுள்ள காயத்தால் மருத்துவமனைக்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டது. வலிகளில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறேன். முன்பை விட வலுவாக மீண்டு வருவேன்' என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் சரண்யாவுக்கு சீக்கிரமே குணமடைய வேண்டுமென பிரார்த்தனை செய்து வருகின்றனர்.