2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
சின்னத்திரை நடிகையான நீலிமா ராணி 7 வருடங்களுக்கு பின் வானத்தைப் போல என்ற தொடரில் நடித்து வருகிறார். அந்த தொடரில் இப்போது காண்பிக்கப்படும் வீட்டில் தான் வாணி ராணி தொடரும் படமாக்கப்பட்டது. இந்நிலையில், அதுகுறித்து பேசியுள்ள நீலிமா, 'இதுதான் டிம்பிள் வீடு. நாங்கள் இந்த வீட்டில் சைக்கிள் ஓட்டி விளையாடி இருக்கிறோம். ஒன்றாக சுற்றி திரிந்திருக்கிறோம். இது சூட்டிங் வீடாக இருந்தாலும் இந்த வீட்டின் ஒவ்வொரு செங்கலுக்கும் என்னுடன் தொடர்புண்டு. தூணில் சாய்ந்திருக்கிறேன். தரையில் அமர்ந்து அழுதிருக்கிறேன். இது போன்ற பல நினைவுகளை எனக்கு இந்த வீடு ரிவைண்டு செய்துள்ளது. இந்த வீட்டை பார்த்ததும் பல ஏக்கமான உணர்வுகள் எனக்குள் வருகிறது' என அந்த வீடியோவில் பேசியுள்ளார்.