முதல்முறையாக ஜோடி சேரும் நானி, பூஜா ஹெக்டே | வெங்கடேஷ் ஜோடியான கே.ஜி.எப் நாயகி! | பிப்ரவரி மாதத்தை குறிவைக்கும் இரண்டு வானம் படக்குழு | நவ., 7ல் ‛அதர்ஸ்' படம் ரிலீஸ் | ஓடிடியில் நேரடியாக வெளியான தீபாவளி படம் | பிளாஷ்பேக்: ஸ்ரீதேவி தான் வேண்டும் என்று அடம்பிடித்த ரஜினி | பிளாஷ்பேக் : 'மனோகரா' கதை ஷேக்ஸ்பியர் எழுதியது | ஒரே நேரத்தில் இரு லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படமா? | சூப்பர் மாரி சூப்பர் : ‛பைசன்' படத்திற்கு ரஜினி பாராட்டு | ‛பரிசு' : லட்சியத்திற்காக போராடும் பெண்ணின் கதை |
சினிமா, சின்னத்திரை சீரியல்களில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்த நீலிமா ராணிக்கு ஒரு காலக்கட்டத்தில் மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருந்தது. திருமணத்திற்கு பின் குடும்பத்திற்காக நடிப்பை கைவிட்ட நீலிமா சீரியல் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இன்ஸ்டாகிராமில் நீலிமா வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவியும் அதேவேளையில் சிலர் அவரை பற்றி ஆபாசமாக பேசியும் வருகின்றனர். அப்போதெல்லாம் பாடி ஷேமிங், நெகட்டிவ் கமெண்டுகளை தூக்கி போட்டுவிட்டு பாசிட்டிவாக ரியாக்ட் செய்து வந்த நீலிமா, தற்போது சிலர் தனது மார்பகங்கள் குறித்து ஆபாசமாக கமெண்ட் செய்வதாக வருத்தப்பட்டுள்ளார்.
நீலிமாவுக்கு அண்மையில் தான் இரண்டாவது குழந்தை பிறந்தது. இதனால் அவரது உடல் எடையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சிலர் நீலிமாவை ஆபாசமாக பாடி ஷேமிங் செய்வதோடு அவரது மார்பகங்கள் பற்றியும் மோசமாக பதிவிட்டு வருகின்றனர். இதனால் வருத்தமடைந்த அவர் அண்மையில் ஒரு பேட்டியின் போது, 'குழந்தைக்கு பால் கொடுப்பதால் தான் என் மார்பகம் அப்படி இருக்கிறது என்று அவர்களிடம் சொல்லி என்ன ஆகப்போகிறது'என்று வருத்தத்துடன் பேசியுள்ளார்.