அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா | 'வாரணாசி' படத்தின் பட்ஜெட், 1300 கோடியா ? |

இயக்குனர் மற்றும் நடிகர் சசி குமார் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தோல்வி படங்களில் நடித்து அவதிப்பட்டு வந்தார். கடந்த வருடத்தில் அவர் நடித்து வெளிவந்த ' அயோத்தி' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து சமீபத்தில் 'கருடன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படமும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மீண்டும் அவரைத் தேடி பட வாய்ப்புகள் வர தொடங்கி உள்ளன.
இந்த நிலையில் அறிமுக இயக்குனர் இயக்கத்தில் குட் நைட் படத்தை தயாரித்த மில்லியன் டாலர் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் சசி குமார் ஹீரோவாக நடிக்கின்றார். இதில் சசி குமாருக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடிக்கவுள்ளார். இது முழுக்க முழுக்க குடும்பத்தை மையப்படுத்தி நடைபெறும் படமாக உருவாகியுள்ளது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.