ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

பாலிவுட் நடிகர் சல்மான்கான் 50 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்யவில்லை. தனக்கென தனி பாதுகாப்பு படை வைத்திருக்கிறார். பண்ணை வீடுகளில் ரகசிய வாழ்க்கை வாழ்கிறார். மும்பை அன்டர் கிரவுண்ட் தாதாக்களுடனும் அவருக்கு தொடர்பு உண்டு. இப்படியான பல தகவல்கள் உண்டு.
இந்த நிலையில் மும்பை பாந்திராவில் உள்ள அவரது வீட்டின் மீது கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி 2 பேர் துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவத்தில் விக்கி குப்தா, சாகர் பால் என்ற இரண்டு ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு துப்பாக்கி வழங்கியதாக பஞ்சாப்பை சேர்ந்த சோனு பிஸ்னோய், அனுஜ் தாபனை கைது செய்து இருந்தனர். இவர்களில் அனுஜ் தாபன் போலீஸ் லாக்-அப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த துப்பாக்கி சூடு தொடர்பாக சிறையில் இருக்கும் தாதா லாரன்ஸ் பிஷ்னோய், அவரது தம்பி அன்மோல் பிஷ்னோய் உள்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய தனஞ்செய் தாப்சிங், கவுதம் பாட்டியா, வாப்சி கான், ரிஸ்வான் கான், தீபக் ஹவாசிங் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இவர்கள் 5 பேரும் தாதா லாரன்ஸ் பிஷ்னோய், அன்மோல் பிஷ்னோயிடம் தொடர்பில் இருந்ததாகவும், பன்வெலில் உள்ள சல்மான்கானின் பண்ணை வீட்டை வேவு பார்த்ததாகவும் தங்கள் வாக்குமூலத்தில் கூறி இருந்தனர்.
இந்தநிலையில் இந்த வழக்கில் பன்வெல் போலீசார் 350 பக்க குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்து உள்ளனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
சல்மான்கான் மீது தாக்குதல் நடத்த சிறையில் இருந்தபடி தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கூலிப்படையினரான தனது கும்பலை சேர்ந்தவர்களுக்கு 25 லட்சம் கொடுத்து உள்ளார். தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் சல்மான்கான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தனர். தாக்குதலுக்கு ஏ.கே.47 துப்பாக்கி போன்ற ஆயுதங்களை பயன்படுத்த திட்டமிட்டு இருந்தனர். ஆயுதங்களை பாகிஸ்தானில் இருந்து வாங்க முயற்சி செய்து உள்ளனர்.
சல்மான்கான் மீது 18 வயதுக்கு குறைந்த மைனர் வாலிபர்களை கொண்டு தாக்குதல் நடத்தவும் தாதா கோல்டி பிரார் அன்மோல் பிஷ்னோய், ரோகித் கோதராவை அறிவுறுத்தி உள்ளார். சல்மான்கான் மீது தாக்குதல் நடத்திவிட்டு அந்த கும்பல் கன்னியாகுமரி வழியாக இலங்கைக்கு தப்பிச் செல்லவும், அங்கு இருந்து வேறு நாடுகளுக்கு செல்லவும் திட்டமிட்டு இருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இது பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.