'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் | 'தி ராஜா சாப்' போட்டியை சமாளிக்குமா 'ஜனநாயகன்' | 'காட்டி' படத்திற்காக வெளியே வராத அனுஷ்கா | விஷால், சாய் தன்ஷிகாவுக்கு நிச்சயதார்த்தம் : பிறந்தநாளில் இரட்டிப்பு மகிழ்ச்சி | லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு |
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா மற்றும் பலர் நடிக்கும் படம் 'தி கோட்'.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகிறது. விஎப்எக்ஸ் காட்சிகளின் வேலைகள் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள 'லோலா' நிறுவனத்தில் நடைபெற்று வருகிறது. அதற்காக இயக்குனர் வெங்கட் பிரபு அமெரிக்கா சென்றுள்ளார்.
இப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. இதுவரையில் இரண்டு சிங்கிள் பாடல்கள் வெளியாகி உள்ளது. அவற்றில் இரண்டாவது பாடலான 'சின்னச் சின்ன கண்கள்' பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடக்கும் எனத் தெரிகிறது.