சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் | மீண்டும் நடிக்க வந்த அர்ச்சனா ரவி |

தமிழில் மண்டேலா எனும் படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகமானவர் மடோன் அஸ்வின். முதல் படத்திற்கே தேசிய விருதை வாங்கினார். இதையடுத்து சிவகார்த்திகேயனை வைத்து 'மாவீரன்' என்கிற படத்தை இயக்கினார். இப்படமும் விமர்சன ரீதியாக வரவேற்பையும், வசூலையும் பெற்றது.
இதன்பிறகு மடோன் அஸ்வின் அடுத்த படம் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் மடோன் அஸ்வின் அடுத்து ஹிந்தியில் ஒரு புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளாராம். இதனை பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தயாரிக்கிறார் எனும் தகவல் சினிமா வட்டாரத்தில் பரவி வருகிறது.