''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், யோகிபாபு, மிஷ்கின் நடித்துள்ள படம் 'மாவீரன்'. இந்த படம் நாளை வெளியாக உள்ளது. இந்தநிலையில், இந்த படத்துக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில், இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் பி.ஜெயசீலன் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்திருந்த வழக்கு மனுவில் “மாவீரன் படத்தில் வில்லனாக நடித்துள்ள மிஷ்கின் வரக்கூடிய காட்சிகளில், அவர் சார்ந்துள்ள கட்சியின் கொடியாக, எங்கள் கட்சியின் கொடியை பயன்படுத்தியுள்ளனர். அந்த காட்சியை நீக்கும் வரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. “இளம் காக்கி, மஞ்சள், இளம் காக்கி என்கிற அடுக்கில்தான் படத்தில் வரும் காட்சிகளில் கொடி வடிவமைக்கப்பட்டு உள்ளது. அது மனுதாரர் கட்சியின் கொடி வண்ணம் இல்லை. படம் 750 தியேட்டர்களில் வெளியாக உள்ளன. இந்த காட்சிகளை மாற்றி அமைக்க வேண்டும் என்றால், 10 முதல் 20 நாட்கள் ஆகும். எனவே, தடை ஏதேனும் விதித்தால் பெரும் நிதி இழப்பு ஏற்படும்” தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து “மாவீரன் படம் வெளியீட்டுக்கு தயாராகி விட்டது. இதற்காக தயாரிப்பு தரப்பு நிறைய செலவு செய்திருக்கிறது. எனவே படத்திற்கு தடைவிதிக்க முடியாது. படத்தில் பயன்படுத்தப்படும் கொடி எந்த அரசியல் கட்சியையும் குறிக்காது என்று படத்தின் துவக்கத்திலும், முடிவிலும் 10 விநாடிகள் வரும் வகையில் 'பொறுப்பு துறப்பு' வெளியிட வேண்டும். ஓடிடி தளத்தில் வெளியிடும்போது சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கிய பிறகே வெளியிட வேண்டும்” என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.