பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

நடிகை வரலட்சுமிக்கும், மும்பை தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுக்கு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. ஜூலை இரண்டாம் தேதி தாய்லாந்தில் அவர்கள் திருமணம் நடைபெறும் நிலையில், அதையடுத்து திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக சரத்குமார், ராதிகா, வரலட்சுமி என அனைவரும் பல பிரபலங்களையும் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று டில்லியில் பிரதமர் மோடியையும் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கி உள்ளார்கள். அப்போது பிரதமருடன் சரத்குமார், ராதிகா, வரலட்சுமி, நிக்கோலாய் சச்தேவ் ஆகியோர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார் சரத்குமார். இவை சோசியல் மீடியாவில் வைரலாகின. அதோடு, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன் ஆகியோரையும் அவர்கள் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கியுள்ளார்கள்.