டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் | தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை | பிளாஷ்பேக்: பக்தி படத்தில் விஜயகாந்த் | பிளாஷ்பேக்: வில்லத்தனத்தில் மிரட்டி, வறுமையில் வாடிய நடிகை | ஐமேக்ஸ் தியேட்டர்கள் : 'ஜனநாயகன், தி ராஜா சாப்' படங்களுக்குப் புதிய சிக்கல் |

விஜய் ஆண்டனி தற்போது 'மழை பிடிக்காத மனிதன்' படத்தில் நடித்து வருகிறார். இதன் டிரைலர் நாளை (ஜூன் 29) வெளியாகிறது. இதனை விஜய் மில்டன் இயக்குகிறார். அடுத்ததாக அவர் நடித்து வரும் 'ஹிட்லர்' படம், பான் இந்தியா படமாக தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் ஆகஸ்ட் மாதம் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது முழுநீள ஆக்ஷன் படமாக உருவாகிறது.
இந்த படத்தை படைவீரன், வானம் கொட்டட்டும் படங்களை இயக்கிய தனா இயக்குகிறார். இதில் ரியாசுமன் நாயகியாக நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சரண்ராஜ் இப்படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். விவேக்-மெர்வின் இசை அமைக்கிறார்கள். நவீன் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். செந்தூர் பிலிம்ஸ் சார்பில் டி.டி.ராஜா மற்றும் டி.ஆர்.சஞ்சய் குமார் தயாரிக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.




