தனுஷின் 50வது படம் 'ராயன்'. இதை அவரே இயக்கி, நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார் இவர்கள் தவிர எஸ்.ஜே .சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படப்பிடிப்பு நிறைவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது. படம் வருகிற ஜூலை மாதம் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.