‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் |
கமல்ஹாசன் வில்லனாக நடித்துள்ள 'கல்கி' படம் நேற்று வெளியானது. அடுத்து 'இந்தியன் 2' படம் வெளிவர இருக்கிறது. இதில் கமல் வயதான ஹீரோவாக நடிக்கிறார். ஷங்கர் இயக்கி உள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படம் அடுத்த மாதம் 12ம் தேதி வெளிவருகிறது. தற்போது படத்தின் புரமோசன் பணிகளில் கமல் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக மும்பையில் இதன் புரமோசன் பணிகள் தற்போது நடந்து வருகிறது. அங்கு கமல் பத்திரிகையாளர்களிடம் கலந்துரையாடினார். அப்போது ஹேராம் படத்தில் ஷாருக்கான் உடன் நடித்த அனுபவம் பற்றி கேட்டபோது கமல் அளித்த பதில்:
'ஹேராம்' படத்தை உருவாக்கியபோது ஷாருக்கானை நான் சூப்பர் ஸ்டாராகவோ, அந்த படத்தை இயக்கிய என்னை அவர் சூப்பர் டைரக்டராகவோ நினைக்கவில்லை. 'ஹேராம்' படத்தில் நாங்கள் இருவரும் நண்பர்களாகவே இணைந்து பணியாற்றினோம். அதில் நடித்ததற்காக ஷாருக்கான் சம்பளம் வாங்கவில்லை. எந்த சூப்பர் ஸ்டாரும் இப்படி செய்யமாட்டார்கள். கலையை நேசிப்பவர்கள் மட்டுமே இப்படி செய்வார்கள். சூப்பர் ஸ்டார் பட்டத்தை நாங்களாக வைத்துக்கொள்வது இல்லை. மக்கள் விரும்பி தருகிறார்கள். அதை ஏற்றுக்கொள்கிறோம்'' என்றார்.