நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'இந்தியன் 2'. இப்படத்தின் டிரைலர் நேற்று யு-டியுப் தளத்தில் வெளியிடப்பட்டது.
டிரைலருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 'இந்தியன்' படத்தில் இடம் பெற்ற அப்பா, மகன் கதாபாத்திரங்களில் அப்பா கதாபாத்திரம் 'இந்தியன் 2' படத்தில் மீண்டும் வருகிறது. முதல் பாகத்தில் மகனையே கொன்றுவிடுவார் அப்பா.
இரண்டாம் பாகத்தில் அப்பா கதாபாத்திரத்தில் அதே வயதான தோற்றத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார். முதல் பாகத்தின் தோற்றம் இந்த இரண்டாம் பாகத்தில் இடம் பெற்றிருந்தாலும் மேலும் விதவிதமான தோற்றங்களிலும் அவர் வருகிறார். இரண்டாம் பாக டிரைலரில் மொத்தம் 6 விதமான தோற்றங்களில் கமல்ஹாசனின் மேக்கப் அமைந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் இது பற்றித்தான் இப்போது பேச்சு அதிகமாகியுள்ளது. அவற்றை வைத்து பல மீம்ஸ்களும் அதற்குள் வர ஆரம்ப்பித்துவிட்டன.