‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

சினிமா நடிகர்கள் எங்காவது வெளியில் சென்றால் அவர்களுக்கு 'பில்டப்' கொடுப்பதற்காக பாதுகாப்பு என்ற பெயரில் பவுன்சர்களை வைத்துக் கொள்வார்கள். ரசிகர்கள் யாரும் அவர்களை நெருங்குவதைத் தடுப்பதுதான் பவுன்சர்களின் வேலை. சினிமா விழாக்களில் இதை அதிகம் பார்க்கலாம். பவுன்சர்கள் வைத்தால்தான் விழாவுக்கே வருவேன் என்று சொல்லும் நடிகர்களும் இங்கு இருக்கிறார்கள்.
ஐதராபாத் விமான நிலையத்தில் நடிகர்கள் நாகார்ஜூனா, தனுஷ் நேற்று சென்று கொண்டிருந்தனர். அப்போது வயதான ரசிகர் ஒருவர் நாகார்ஜூனாவை நெருங்கிச் சென்றார். அவரை இழுத்து கீழே தள்ளினார் பவுன்சர் ஒருவர். பின்னால் வந்து கொண்டிருந்த தனுஷூம் அவரது செயலைப் பார்த்து அமைதியாக நடந்து போனார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி, ரசிகர்களின் கண்டனத்தைப் பெற்றது. மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொள்வதா என பலரும் கமெண்ட் செய்தனர்.
இந்நிலையில் அந்த வீடியோவைப் பகிர்ந்து, “இப்போதுதான் எனது கவனத்திற்கு வந்தது. இப்படி நடந்திருக்கக் கூடாது. அந்த ஜென்டில்மேனிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எதிர்காலத்தில் இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்ள முன்ஜாக்கிரதையாக இருக்கிறேன்,” என நாகார்ஜூனா மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனால், பின்னால் அமைதியாகக் கடந்து போன தனுஷ் இது குறித்து எந்த ஒரு கருத்தும் சொல்லவில்லை.




