'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தமிழ் சினிமாவை வரிகளால் கண்ணதாசனும், இசையால் எம்.எஸ்.விஸ்வநாதனும் அரை நூற்றாண்டு காலம் ஆண்டார்கள். ஆனால் காலம் காட்டிய அதிசயம் என்ன தெரியுமா? இருவருமே ஒரே நாளில் (ஜூன் 24) ஒரு வருட இடைவெளியில் பிறந்தார்கள்.
கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் ஒரு சாதாரணமான கிராமம்தான் இலப்பள்ளி. அந்த கிராமத்தில் வாழ்ந்த 'மனையங்கத்' பரம்பரையில் வந்த சுப்ரமணியனுக்கும், அவரது மனைவி நாணிக்குட்டி என்று அழைக்கப்பட்ட நாராயணி குட்டி அம்மாளுக்கும் 1928ம் வருடம் ஜூன் 24ம் தேதி பிறந்தார் விஸ்வநாதன். குடும்பப் பெயர், அப்பா பெயர் இரண்டையும் இணைந்த மனையங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன் தான் மெல்லிசை மன்னரான எம்.எஸ்.விஸ்வநாதன். இசை குடும்பத்தில் பிறக்காமல் சுயமாக இசை கற்று அந்த இசையையும், கேட்ட மக்களையும் பின்னாளில் ஆட்சி செய்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு அருகில் உள்ள சிறுகூடல்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர் கண்ணதாசன். இயற்பெயர் முத்தையா. அப்பா பெயர் சாத்தப்ப செட்டியார். அம்மா பெயர் விசாலாட்சி. உடன் பிறந்தவர்கள் 6 சகோதரிகள், 3 சகோதரர்கள். செட்டிநாட்டில், நிறைய குழந்தைகளைப் பெற்ற தம்பதி, குழந்தைகள் இல்லாத தம்பதிக்கு பிள்ளையை சுவீகாரம் கொடுக்கும் நடைமுறையாக இருக்கிறது. கண்ணதாசனும் அவ்விதம் காரைக்குடியைச் சேர்ந்த பழனியப்ப செட்டியார்-சிகப்பி ஆச்சி தம்பதிக்கு 7 ஆயிரம் ரூபாய்க்கு சுவீகாரம் தரப்பட்டார். சுவீகாரம் சென்ற வீட்டில் அவருக்கு வைக்கப்பட்ட பெயர் நாராயணன். எட்டாம் வகுப்பு வரைதான் படித்துள்ளார். பத்திரிகைகளில் எழுதத் தொடங்கிய காலத்தில் வைத்துக் கொண்ட புனைப்பெயர் கண்ணதாசன்.
இசை பின்புலம் இல்லாத எம்.எஸ்.விஸ்வநான் இசையிலும், 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்த கண்ணதாசன் எழுத்து துறையிலும் சாதித்தது வெறும் சாதனை அல்ல... பெரும் வரலாறு. இன்று அவர்களது பிறந்த நாளில் அவர்களை நினைவு கூறும்வோம், பிரார்த்திப்போம்.